© 2017 Hogash Studios.

அறிமுகம்

அவரைப் பற்றி...
உயர்ந்த இலக்குகள் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாக சேலம் நகரில் 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதியில் பிறந்தார். தலையைச் சுற்றி காதைத் தொடும் பள்ளிக்கூட அனுமதியில் கை எட்டாததால் பிறந்த நாள் ஜூன் 16 என்று மாற்றப்பட்டது. தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால் அவருடைய பெயரும் சகோதர சகோதரிகளைப்போல தமிழ்ப் பெயராகவே இயற்றப்பட்டது.
சின்ன வயதிலேயே மேடையில் பேசும் பயிற்சி தரப்பட்டதால் மாவட்டத்தில் நடக்கிற பேச்சுப் போட்டிகளிலெல்லாம் அவருடைய குடும்பத்திற்கே அத்தனை பரிசுகளும் வந்து சேரும். அப்படி துளிர்விட்டதுதான் படிக்கிற ஆசை. தமிழில் படித்ததால் தாய் மொழியில் பேசவும், எழுதவும் சிக்கலில்லாத திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது. அருகிலிருக்கிற பள்ளியே சிறந்த பள்ளி என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில் நாங்கள் படித்த பள்ளிக்காக அருகிலேயே குடியிருக்க தந்தை செய்த முயற்சி எங்கள் கல்வியைச் செதுக்கவும், செம்மையாக்கவும் உதவியது.
TOP